ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம்ரவி. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ”பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிலையில், ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”எனக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியானது. அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி, நான் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தேவைப்பட்டால் தங்களைப் பரிசோதித்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.