Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நாங்க எத்தன தடவை சொல்லுறது… அதிகாரிகளின் அதிரடி முடிவு… உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை…!!

ஊரடங்கின் விதிமுறைகளை மீறி செயல்பட்டுக் கொண்டிருந்தால் நூற்பாலையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள வேடபட்டி ஊராட்சி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நூற்பாலைகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த ஊரடங்கு சமயத்தில் நூற்பாலைகள் இயங்க அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் வேடப்பட்டி ஊராட்சி பகுதியில் இருக்கும் ஒரு நூற்பாலை தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மடத்துக்குளம் தாசில்தார் கனிமொழி மற்றும் வருவாய் துறையினர் அங்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் ஆட்களை வைத்து இயங்கிக் கொண்டிருந்த நூற்பாலையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். மேலும் ஊரடங்கு சமயத்தில் விதிமுறைகளை மீறி இவ்வாறு நடந்து கொண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நூற்பாலை உரிமையாளரை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |