Categories
தேசிய செய்திகள்

புயலில் விழுந்த மரங்களின் நடுவே… ஆட்டம் போட்ட சீரியல் நடிகை… நெட்டிசன்கள் விமர்சனம்..!!

புயலில் விழுந்த மரங்களுக்கு நடுவே தொலைக்காட்சி நடிகை தீபிகா சிங் மழையில் நடனமாடிய வீடியோ பதிவிட்டுள்ளார். இது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

டவ்-தே புயல் காரணமாக மும்பையில் பல பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. பலத்த காற்றின் காரணமாக சாலையில் விழுந்த மரங்களுக்கு இடையே நடனமாடி வீடியோ மற்றும் புகைப்படங்களை நடிகை தீபிகா சிங் பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். புயல் காரணமாக மக்கள் பலரும் வீடுகளை இழந்து தவித்து வரும் நிலையில் இதுபோன்ற வீடியோவை வெளியிடுவது தவறானது என்று தெரிவித்துள்ளனர், அதுவும் முக கவசம் அணியாமல் நடுரோட்டில் நின்று நடனம் ஆடுவது என்பது மிகவும் தவறானது என்று நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

Categories

Tech |