அரசுப் பேருந்தை ஓட்டி சென்ற டிரைவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து கொடைக்கானலுக்கு 43 பயணிகளுடன் புறப்பட்ட அரசு பேருந்து காளவாசல் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து டிரைவர் ஆறுமுகத்திற்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஆறுமுகம் பேருந்தை சாமர்த்தியமாக சாலையின் ஓரமாக நிறுத்தினார்.
இந்நிலையில் ஓட்டுநர் ஆறுமுகம் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஓட்டுநரின் சடலத்தை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.