இன்ஜினியரிங் படிக்க விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு தேதியை உயர் கல்வி துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்ந்து ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வந்ததால், கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை தாமதமாக நடைபெற்றது. +12 தேர்வு வெளியானவுடன் முதற்கட்டமாக தொடங்கிய இன்ஜினியரிங் சேர்க்கை தகுதி தற்போது முடிவு பெற்றதையடுத்து, கலந்தாய்வுக்கான தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி,
ஒரு லட்சத்து எட்டாயிரம் மாணவர்கள் பொறியியல் சேர்க்கைக்கு தகுதி பெற்றுள்ளனர் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். www .tneaonline .org என்ற இணையதளத்தில் தரவரிசை பட்டியலை அறிந்துகொள்ளலாம். மேலும் அக்டோபர் 1 முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை மாற்றுத் திறனாளிகளுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் அக்டோபர் 8 முதல் 27ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக பொது பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறும் என அறிவித்துள்ளனர். எனவே மாணவர்கள் கலந்தாய்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.