பீகார் மாநிலம் சாம்பரான் பகுதியைச் சேர்ந்தவர் குட்டு குமார். இவருக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு சோபா சிங் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில், 1 மகன் மற்றும் 3 மகள்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் குட்டுகுமார் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்புக்கு உளவு பார்ப்பதாக கூறி கடந்த 2 தினங்களுக்கு முன்பாக சிறப்பு அதிரடி படையினர் அவரை கைது செய்துள்ளனர். ஆனால் இது பொய்யான குற்றச்சாட்டு என்று குட்டு குமாரின் மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். அதாவது குட்டு குமாருக்கு ஆரம்பத்திலிருந்து ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் இருந்துள்ளது.
திருமணம் முடிந்த பிறகு ஆபாச படம் பார்க்கும் பழக்கத்திற்கு குட்டு குமார் அடிமையாக இருந்துள்ளார். இப்படி ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென அவர் தடை செய்யப்பட்ட இணையதளத்திற்குள் நுழைந்துள்ளார். அதில் அவர் தன்னுடைய போன் நம்பர் மற்றும் தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில், அந்த வலைதளம் ஐஎஸ்ஐ அமைப்பின் வலைதளம் என்பது அவருக்கு தெரியவில்லை.
இவருடைய செயல்பாடுகளை ஐஎஸ்ஐ அமைப்பு தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், அவர் ஆபாச படம் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையானவர் என்பது தெரிய வந்துள்ளது. இதனால் குட்டு குமாருக்கு பணத்தாசை காட்டி உளவு பார்க்குமாறு ஐஎஸ்ஐ அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த உண்மை 2 வருடங்களுக்கு முன்பாக குட்டு குமாருக்கு தெரிய வந்த நிலையில் அவர் அதிலிருந்து விலக முயற்சி செய்துள்ளார். ஆனால் ஐஎஸ்ஐ அமைப்பு அவரின் தனிப்பட்ட அடையாளம் ஆதார் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் எடுத்துக்கொண்டதோடு அவரை மிரட்டி உளவு பார்க்குமாறு வற்புறுத்தியுள்ளது.
இதனால் குட்டு குமார் ராணுவத்தினரின் செயல்பாடுகள் குறித்து உளவு பார்த்து ஐஎஸ்ஐ அமைப்புக்கு தெரியப்படுத்தியுள்ளார். இவர் பீகாரில் இருந்து மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரி பகுதிக்கு சென்று பல்வேறு பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்களை உளவு பார்த்து ஐஎஸ்ஐ அமைப்புக்கு தகவல் தெரிவித்துள்ளார். இவர் தெரிவிக்கும் தகவல்களுக்கு 10000 முதல் 12000 வரை ஒவ்வொரு முறைக்கும் வாங்கியுள்ளார். மேலும் இது விசாரணையில் தெரிய வந்த நிலையில், அவர் ஐஎஸ்ஐ அமைப்புக்கு என்னென்ன ஆதாரங்களை பகிர்ந்துள்ளார் என்பதை கண்டறியும் நோக்கில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.