தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அனுசுயா. இவருடைய புகைப்படங்கள் சமீப காலமாகவே ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இதன் காரணமாக நடிகை அனுசுயா ஆந்திர மாநில சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் தன்னுடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுபவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பசலபுடி கிராமத்தைச் சேர்ந்த ராம வெங்கடராஜு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்தான் நடிகையின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் ராஜ வெங்கட ராஜு 3 வருடங்களாக வெளிநாட்டில் பிளம்பர் ஆக வேலை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவரின் லேப்டாப்பை போலீசார் ஆய்வு செய்ததில் நடிகைகள் ரோஜா, விஷ்ணு பிரியா, ரஷ்மி, பிரகதி ஆகியோரின் புகைப்படங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.