Categories
தேசிய செய்திகள்

ஓ.பி.சி-க்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு; உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு…!!

மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்புக்கு மாநிலங்கள் ஆல் வழங்கப்படும் இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டன. இந்த வலக்கை  நீதிபதிகள் நாகேஸ்வரராவ் ஹேமந்த் குப்தா அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 15ஆம் தேதி விசாரித்தது.

அப்போது இந்த ஆண்டிலேயே ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால் மத்திய தொகுப்பு இடங்களுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஒபிசி பிரிவினருக்கு நடப்பாண்டில் 50% மட்டுமல்ல 27 சதவீத இட ஒதுக்கீட்டையும் கண்டிப்பாக வழங்க முடியாது என பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். மேலும் அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வ வாதங்களை கடந்த 20-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கில் வரும் திங்கள் அன்று தீர்ப்பு வழங்க உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |