Categories
சினிமா தமிழ் சினிமா

ஓ… தற்கொலைக்கு இதுதான் காரணமா… வெளியான ஆடி கார் விவகாரம்… சிக்கும் அரசியல்வாதிகள்… புதிய திருப்பம்..!!

தமிழகத்தில் அடுக்கடுக்காக பெருகிவரும் தற்கொலை சம்பவங்கள் இந்திய திரையுலகில் அதிகம் தற்போது நடந்து வருகின்றது.

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு உயிரை பரிகொடுக்கும் நிலை தற்போது பெருகி வருகிறது. சின்னத்திரை நடிகை சித்ரா ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஒரு மந்திரியின் கார் வந்து சென்றிருக்கிறது. அந்த ஹோட்டலுக்கு அமைச்சரின் கார் அடிக்கடி வரும் என்பது குறிப்பிடத்தக்கது. போலீஸ் பாதுகாப்பை தவிர்த்து விலை உயர்ந்த காரில் ஆரோக்கியமான மாதிரி அங்கு வருவது வழக்கம். சித்ராவிற்கு ஆடி கார் பரிசு வழங்கியதன் பின்னணியிலும் இவர் இருக்கிறாராம்.

பெரம்பலூர் அதிமுக எம்எல்ஏ இளம்பை தமிழ்செல்வன் பெயரை தற்போது கூறிவருகின்றனர். இந்நிலையில் வேலை வாங்கி தருவதாக மோசடி நடந்த அதே பெரம்பலூர் ஹோட்டலில் நடந்த ஒரு விழாவிற்கு நடிகை சித்ராவை தமிழ்செல்வன் அழைத்திருக்கிறார். 2020 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஆகவும் எம்எல்ஏவின் அழைப்பின் பெயரில் சித்ரா பெரம்பலூர் வந்திருக்கிறார். பிறகு கடந்த அக்டோபர் 21ஆம் தேதி பார் ஹவுஸ் என்கின்ற கிப்ட் ஷாப் ஐ திறந்து வைக்க சித்ரா எம்எல்ஏவை அழைத்திருக்கிறார்.

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சித்ரா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான கோவையை சேர்ந்த ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியின் நிர்வாகியான தினேஷ் மூலமாகவே விழாக்களுக்கு வந்துள்ளார். இதுபற்றி அவரிடம் விசாரணை நடத்திய போது: “தான் ஈவன் மேனேஜ்மெண்ட் துறையில் செயல்பட்டு வருகிறேன். பெரும்பாலும் அவரை விழாக்களுக்கு அழைத்து சென்றது நான்தான்.

எம்எல்ஏ எனது செல்போன் மூலமாக சித்ராவுக்கு அனுப்பிய குறுந்தகவல் தான் ,அவரது கணவருக்கும் அவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என்பது உண்மை அல்ல. சித்ராவும் எம்எல்ஏ வும் பேச வேண்டுமென்றால் நேரடியாக பேசி இருக்கலாம். எனக்கு ஹேம்நாத் சித்திரா பதிவு திருமணம் செய்துகொண்டது கூட தெரியாது. 2020 ஆம் ஆண்டு சித்ரா ஹோட்டல் விழாவில் பங்கேற்ற போது நான் அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் விசாரித்துக் கொள்ளுங்கள். மற்ற விழாக்களில் நான் கலந்து கொண்டேன். அவையெல்லாம் வெறும் ஐந்து நிமிட நிகழ்ச்சிகள்தான். ஆடி கார் வாங்கி தர நான் உதவி செய்யவில்லை. நான் இன்னும் வாடகை வீட்டில்தான் இருக்கிறேன். எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் கூறி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து சித்ரா மரணம் குறித்து விசாரிக்கும் போது போலீஸ் வட்டாரங்கள், சித்ராவுக்கு மேனேஜர் என யாரும் கிடையாது என்று கூறுகின்றனர்.

சித்ரா மீது ஹேம்நாத் சந்தேகப்பட்டது அவர் தற்கொலை செய்து கொள்ள காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும் விஜய் டிவி ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு வந்து பலமுறை தகராறு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக பல்வேறு நண்பர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் சித்ராவின் மரணத்தைப் பற்றியும், ஆடி கார் பற்றியும் விசாரிக்க பெரம்பலூருக்கும், புதுக்கோட்டைக்கும் போலீஸ் டீம் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |