Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NZvIND : இன்று முதல் டி20 போட்டி….. ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கும் இந்தியா…. நியூஸியை வெல்லுமா?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது.

ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த 2022 டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்து விமர்சனங்களை சந்தித்தது இந்திய அணி. இதனைத்தொடர்ந்து அடுத்ததாக இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் பங்கேற்று விளையாடுகிறது. இந்ததொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில்  இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் செயல்படுகிறார். டி20 தொடர் இன்று தொடங்கி நவம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் பின் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் 25ஆம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வெலிங்டனில் இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். அதேபோல ஷ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் என அதிரடி பேட்ஸ்மேன்களும் அணியில் இருக்கின்றனர். பந்துவீச்சை பொருத்தவரையில் அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் முகமது சிராஜ், குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோரும் அணியில் இருக்கின்றனர். ஆனால் ஆடும் லெவனில் யாரை பாண்டியா தேர்வு செய்வார் என்பது போட்டிக்கு முன்தான் தெரியவரும்.

அதேசமயம் நியூசிலாந்து அணியும் உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடி அரையிறுதி வரை சென்று பாகிஸ்தானிடம் தோற்று வெளியேறியது. நியூசிலாந்து அணி தனது சொந்த மண்ணில் விளையாடுவதால் கூடுதல் பலத்துடன் இருக்கும். கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் பின் ஆலன், டெவோன் கான்வே, ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், டிம் சவுத்தி ஆகிய சிறந்த வீரர்கள்  உள்ளனர். இரு அணிகளும் இதுவரையில் டி20 போட்டிகளில் 20 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் இந்தியா 11 முறையும், நியூசிலாந்து 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி 21 ஆவது போட்டியாகும்.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 இந்திய அணி :

ஹர்திக் பாண்டியா (கே), ஷுப்மான் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (து.கே மற்றும் வி.கி ), சஞ்சு சாம்சன் (வி.கீ ), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.

இந்தியாவுக்கு எதிரான டி20 நியூசிலாந்து அணி :

கேன் வில்லியம்சன் (கே ), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டெவோன் கான்வே (வி.கீ ), லாக்கி பெர்குசன், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, பிளேயர் டிக்னர்.

Categories

Tech |