இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 1:0 என்ற கணக்கில் வென்றது.. இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி இன்று ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.. இதில் இந்திய அணியை ஷிகர் தவான் வழி நடத்துவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது..
அதேபோல கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல் ராகுல் ஆகிய வீரர்களுக்கு இந்த தொடரிலும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் களம் காண்பார்கள்.. அதேசமயம் நியூசிலாந்துக்கு எதிராக டி20 தொடரில் இந்திய அணியை வழி நடத்திய ஹர்திக் பாண்டியாவுக்கு இதில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது..
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியை வெற்றியுடன் தொடங்குவார்களா என்பதை ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.. டி20 தொடரை பறிகொடுத்த நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை கைப்பற்ற முனைப்புடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி :
ஷிகர் தவான்(கே), ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (து.கே மற்றும் வி.கீ ), சஞ்சு சாம்சன் (WK), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஷாபாஸ் அகமது, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.
ஒருநாள் போட்டிகளுக்கான நியூசிலாந்து அணி:
கேன் வில்லியம்சன் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், ஃபின் ஆலன், டெவோன் கான்வே, டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, ஆடம் மில்னே, டிம் சவுத்தி.