நியூசிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் வெற்றி பெற்ற வங்காளதேச அணி டி 20 தொடரை வென்றது .
நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கிடையிலான 4-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் மட்டுமே குவித்தது. இதில் அதிகபட்சமாக வில் யங் 46 ரன்கள் குவித்தார் .வங்காளதேச அணி சார்பில் முஸ்தபிசூர் ரஹ்மான் மற்றும் நசும் அஹ்மத் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் பிறகு 94 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது.
இதில் லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன், முஷ்பிக்கூர் ரஹீம் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதில் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய முகமது நைம் 29 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார் .இதன் பிறகு களமிறங்கிய கேப்டன் மஹ்மதுல்லா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார் .இறுதியாக வங்காளதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் வங்காளதேச அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.