Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. நிலக்கடலை சாப்பிட்ட 11/2 வயது குழந்தை மரணம்…. திண்டுக்கல் அருகே சோகம்…!!

திண்டுக்கல் அருகே நிலக்கடலையை முழுங்கி ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி ரேவதி. இவர்கள் இருவருக்கும் தர்ஷனா  என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையும், இரண்டரை மாதத்தில் மற்றொரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 28ஆம் தேதியன்று தாய் வீட்டில் இருக்கும் சமயத்திலேயே ஒன்றரை வயது குழந்தையான தர்ஷனா தோலுடன் நிலக்கடலையை விழுங்கியுள்ளார்.  இதில், எதிர்பாராத விதமாக நிலக்கடலையின் தோல்  அவரது தொண்டைக்குழியில் சிக்கி,

மூச்சு விட முடியாமல் தவித்து ,  தர்ஷனா வீட்டிலேயே மயங்கி விழ, அவரது பெற்றோர்கள் அவரை பதறியடித்த படி தூக்கி கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை தர்ஷனா பரிதாபமாக உயிர் இழந்தார். பின் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு,தாய் ரேவதி அளித்த தகவலின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |