பெற்றோர் காதலை கண்டித்ததால் செவிலியர் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் குள்ளம்பட்டி அரசு குரும்பப்படியை சேர்ந்தவர் கருணாகரன். கூலித் தொழிலாளியான கருணாகரனின் மகள் நாகதேவி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செவிலியர் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் நாகதேவி வாலிபர் ஒருவரை காதலித்துள்ளார். நாகதேவியின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வர மாணவியை கண்டித்துள்ளனர் பெற்றோர்.
இதனால் மனமுடைந்த நாகதேவி வீட்டில் யாரும் இல்லாத சமயம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் குறித்து சாணார்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பொன்குமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.