கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு செவிலியர் செய்த தியாகம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
பள்ளி, கல்லூரி, தியேட்டர், மால் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அனைத்தும் மூடப்பட்டு இருந்தாலும், மருத்துவர்கள் மருத்துவமனைகளை மூடவே இல்லை. எனவே மருத்துவர்களுக்கும் , செவிலியர்களுக்கும் மிகப்பெரிய கடமைப்பட்டிருக்கிறோம். அதிலும் சீனாவில் செவிலியர் ஒருவர் செய்த செயலை கேட்கையில் உண்மையாகவே அவரை மனம் குளிர பாராட்ட வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.
ஏனென்றால் சீனாவில் ஏற்கனவே நிறைய பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சிகிச்சை பெற்று வரும் சூழ்நிலையில் குறிப்பிட்ட ஏரியாவில் மருத்துவமனையில் சிலர் முற்றிய நிலையில் பாதிக்கப்பட்டு கிடந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனிப்பட்ட முறையில், செவிலியர்கள் தேவைப்பட்டனர். அந்த செவிலியர்கள் தலையில் முடி வைத்திருக்கக்கூடாது மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இதில் பலர் இதை ஏற்காமல் சிகிச்சை அளிக்க மறுத்தனர். ஒரு சிலர் அழுது கொண்டே மொட்டை அடித்து ஏற்றுக் கொண்டனர். அதிலும், பெண் ஒருவருக்கு அடுத்த 10 நாள்களில் திருமணமாக இருந்தது. அவர் கல்யாணம் செய்து கொள்ள வேண்டிய பையனிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார். அது என்னவென்றால்,
உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும். உன்னை எவ்வளவு பிடிக்குமோ அதே போல் எனக்கு என்னுடைய வேலையை பிடிக்கும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் முற்றிப்போய் அழுகும் போது எனக்கு மிகவும் மன வேதனையாக இருக்கிறது. பத்து நாளில் நமக்கு கல்யாணம் இருந்தாலும், நான் மொட்டை அடித்துக்கொண்டு அவர்களுக்கு சேவை செய்ய நினைக்கிறேன். அதற்கு உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சம்மதமா என்று கேட்டுள்ளார்.
இதற்கு அவர் வருங்கால கணவர் கூறியுள்ளார். நீ பார்க்கின்ற வேலையை எவ்வளவு காதலிக்கிறாய் என்றால் உன்னை மாதிரியான மனைவி கிடைப்பதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கூறி சம்மதித்தார். பத்து நாள் கழித்து கல்யாணம் வைத்திருக்கக்கூடிய ஒரு செவிலியர் மொட்டை அடித்து கொண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைபார்த்து வருகிறார் என்பது சாதாரணமான ஒரு விஷயம் அல்ல. எல்லா மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் துப்புரவு பணியாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க நாம் கடமைபட்டிருக்கிறோம்.