புதுவை மக்களவை வேட்பாளராக N.R காங்கிரஸ் கட்சி கே.நாராயணசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற , சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . இதையடுத்து தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக கூட்டணி ஆதரவுடன் புதுச்சேரி NR.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் , செய்தியாளர்களை சந்தித்த N.R காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி கூறுகையில் , புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக ஆதரவுடன் N.R காங்கிரஸ் கட்சி சார்பில் கே.நாராயணசாமி வேட்பாளராக போட்டியிடுகிறார் என்று அறிவித்துள்ளார்.