காங்கோவில் மலேரியா போன்ற அறிகுறிகளுடன் கூடிய மர்ம நோய் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலில் இருந்து பரவியதில் சுமார் 165 குழந்தைகள் பரிதாபமாக இறந்துள்ளார்கள்.
காங்கோவில் குங்கு என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென மலேரியா போன்ற அறிகுறிகளுடன் கூடிய மர்ம நோய் பரவ தொடங்கியுள்ளது.
இவ்வாறு பரவ தொடங்கிய மர்ம நோயால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டதோடு மட்டுமின்றி சுமார் 165 குழந்தைகள் பரிதாபமாக இறந்துள்ளார்கள்.
இதுகுறித்து காங்கோவின் சுகாதார அதிகாரி கூறியதாவது, மேற்குறிப்பிட்டுள்ள மர்ம நோய் தொடர்பாக எங்களுக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.