Categories
தேசிய செய்திகள்

“இனி விமான நிலையங்களில் இந்த பரிசோதனை கட்டாயம்”…. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

உலக அளவில் சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா பரவல் தொற்று அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக சீனாவில் உருமாறிய பிஎப் 7 கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்புகளும் நடைபெறுகிறது. இந்தத் தொற்று இந்தியாவிலும் 3 பேருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை தீவிர படுத்தியுள்ளது. இந்நிலையில் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன் பிறகு சீனாவில் கொரோனா பரவால் அதிகரித்து வருவதால் அங்கிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 201 தோற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக 3,397 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா பரவல் பாதிப்புகள் இருந்தாலும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் மத்திய மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |