Categories
தேசிய செய்திகள்

“இனி ஆயுள் சான்றிதழை வீட்டிலிருந்தபடியே சமர்பிக்கலாம்”….. ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!!

இந்தியாவில் ஓய்வூதியதாரர்கள் வருடம் தோறும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஆயுள் சான்றிதழ் சமர்ப்பித்தால் மட்டுமே அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். அதன் பிறகு மத்திய அரசு மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் பென்ஷன் பெரும் ஓய்வூதிய தாரர்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறையானது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்கள் நேரில் சென்று ஆயுள் சான்றிதழை  பெறுவதில்  பல்வேறு விதமான சிக்கல்களை எதிர்கொள்கிறாரகள். இதனால் தான் மத்திய அரசால் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை  வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் தபால்காரர் நேரடியாக வீட்டிற்கு வந்து டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை பெற்றுக்கொள்வார்.

இதற்கு பென்ஷன் வாங்குபவர்கள் தபால் காரரிடம் ஆதார் அட்டை எண், மொபைல் எண், பிபிஎஃஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு எண் போன்ற விவரங்களை கொடுத்து கைரேகையை பதிவு செய்தால்‌ டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை உடனடியாக சமர்ப்பித்துக் கொள்ளலாம். கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி இந்தியா அஞ்சல் துறையின் சார்பில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி தொடங்கப்பட்டது.

இந்த திட்டம் நாடு முழுவதும் உள்ள 1,36,000தபால் அலுவலகங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், 5 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கணக்கு தொடங்கியுள்ளனர். மேலும் மத்திய அரசின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் தபால் காரரின் உதவியோடு டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழை சமர்ப்பித்து கொள்ளுமாறு மத்திய அரசு கூறியுள்ளது.

Categories

Tech |