Categories
அரசியல் மாநில செய்திகள்

இனி ADMKஒரே அணி தான்… மீண்டும் சசிகலா… ஈபிஎஸ்_உடன் பேச்சு… ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி ..!!

நேற்று நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியதை அடுத்து அவர் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடம் வந்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கழகத்தினுடைய நிறுவன தலைவர், பொன்மன செம்மல், மக்கள் திலகம்,  புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,  காலமெல்லாம் ஏழை எளிய மக்கள் மீது அன்பும்,

வணக்கம்:

பண்பும், பாசமும், பற்றும்,பரிவும் கொண்டு நல்லாட்சி நடத்திய   இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்கள் ஆன்மாக்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றை கோடி தொண்டர்களின் சார்பில் எங்களுடைய வணக்கத்தை இந்த நல்ல நேரத்தில் நாங்கள் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றோம்.

வெல்ல முடியாத இயக்கம்:

இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் தொண்டர்கள் இயக்கமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இந்த மாபெரும் இயக்கத்தை  உருவாக்கினார்கள். புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள்,  இந்த இயக்கத்தை தொண்டர்கள் இயக்கமாக,  யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் உருவாக்கினார்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் 10 ஆண்டு காலம், அம்மா அவர்கள் 16 ஆண்டு காலம் நல்லாட்சியை தமிழக மக்களுக்கு அர்ப்பணித்திருக்கிறார்கள்.

வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு:

இன்றைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அசாதாரணமான சூழல்,  அந்த சூழலில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, டெல்லி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியபடி,  கடந்த கால நிகழ்வுகளை எல்லாம் மீறி, பொதுக்குழு என்ற பெயரிலே நடத்தப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட எந்த தீர்மானங்களும் செல்லாது என்றும்,  23.06.2022 என்ன நிலைமையோ ? அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அது அப்படியே நீடிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை இன்றைக்கு வழங்கி இருக்கிறது.

தொண்டர்களுக்கு காணிக்கை:

இந்த தீர்ப்பை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஒன்றை கோடி தொண்டர்களுக்கு நாங்கள் காணிக்கையாக அளிக்கிறோம். தொண்டர்கள் என்ன விரும்பினார்களோ ?  அது இன்றைக்கு நடந்திருக்கிறது. ஏன் என்று சொன்னால் ?  இந்த இயக்கம் தொண்டர்கள் இயக்கம்.  தொண்டர்கள் இயக்கத்தை யார் பிளவுபடுத்த நினைத்தாலும் அது நடக்காது ?

சர்வாதிகாரி:

யார் சர்வாதிகாரத்தின் ஒரு தனிநபர் குழுவிற்க்கோ ? தனிநபர் குழுவிற்க்கோ ? அல்லது ஒரு குடும்பத்திற்கோ ? இந்த இயக்கத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தால்,  அதுவும் நடக்காது என்று தான் இன்றைக்கு இந்த தீர்ப்பின் மூலமாக நல்ல நியதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கிடைத்திருக்கிறது என்பதை நான் பணிவோடு தெரிவித்துக் கொள்ள,  கடமைப்பட்டு இருக்கின்றேன்.

முழுமையான வெற்றி:

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் இந்த இயக்கத்தை  தொண்டர்களுக்கான இயக்கமாக உருவாக்கி வளர்த்தார்கள். அது நிரூபணம் ஆகி இருக்கிறது. இது முழுமையான வெற்றி. அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு முழுமையான வெற்றி. அறிக்கையில் தாய்வழி வந்த தன்கண்கள் எல்லாம் ஒருவழி நின்றாள். பிளவுபட்ட அணியை அழைக்கிறீர்களா ?

இணைக்க முயற்சி:

நாங்கள் ஏற்கனவே அறிக்கை மூலமாக தெரிவித்து இருக்கிறோம்.  அனைவரும் ஒன்றுபட வேண்டும். யாரெல்லாம் கழகத்திலிருந்து நீக்கி வைக்கப்பட்டிருக்கிறார்களோ,  அவர்கள் அனைவரையும் கழகத்தில் சேர்த்து இருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறோம். அது இன்றைக்கு நடந்திருக்கிறது.

மீண்டும் சசிகலா:

யாரெல்லாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைக்கு,  கோட்பாடுகளுக்கு இசைந்து வருகிறார்களோ அவர்கள்  சேர்த்துக் கொள்ளப்படும் இன்றைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு 23.06.2022-ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ன நிலையில் இருந்ததோ அந்த நிலை நீடிக்கும் என்று அளித்திருக்கின்றது. அதற்கு  நீதிமன்றத்திற்கு மதிப்பளித்து நாங்கள் நடப்போம்.

மக்களுக்கு பதில்:

நீங்கள் என்னை பார்த்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நான் உங்களை பார்த்து மக்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். நான் என்ன பதில் சொல்கிறேனோ, அதை பதிவிட்டுக் கொள்ளுங்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மாபெரும் இயக்கம், மக்கள் இயக்கம். தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்கள் சொல்லியபடி,  விமர்சனங்களை தாங்கிக் கொள்கின்ற மனப்பக்குவம் அவர்களுக்கு இருக்க வேண்டும்.

பொறுமை:

அவமானங்களை யார் ஏற்படுத்தினாலும் ? தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் மீது அதைப் பொறுத்து, அனைவரையும் அரவணைத்து செல்கிறது தான் தலைமை பொறுப்பில் இருக்கின்றவர்கள் பண்பு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு தொண்டர்கள் அளித்திருக்கின்ற பொறுப்பு,  தொண்டர்கள் அளித்திருக்கின்ற பொறுப்பு ஒருங்கிணைப்பாளர்.

தியாகங்களை நினைத்து செயல்படுவேன்:

ஆக நான் அனைவரையும் ஒருங்கிணைத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினை புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,  புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் எப்படி இந்த இயக்கத்தை வலுவான இயக்கமாக,  அனைவரையும் ஒருங்கிணைந்து எடுத்துச் செல்கிறார்களோ,  அதை நாங்கள் அந்த இருபெரும் தலைவர்கள்,  இந்த இயக்கத்திற்கு செஞ்ச தியாகங்களை மனதை நிறுத்தி செயல்படுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இனிமேல் ஒரே தரப்பு தான்:

அவங்க தரப்பு,  எங்க தரப்புலாம் இனிமேல் இல்ல. அனைத்திந்திய  அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஒரே இயக்கம் தான். அது தொண்டர்கள் இயக்கம். 23.06. 2022-ல் அதற்கு முன்னால் கட்சியில் யாரெல்லாம்,  பதவியில், பொறுப்பில், இருந்தார்களோ அவர்கள் எல்லாம் அப்படியே நீடிப்பார்கள் என்பது தான் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு.இணை ஒருங்கிணைப்பாளரோடு இணைந்து பயணிப்பீங்களா என்ற கேள்விக்கு,  தேவைப்பட்டால் கலந்து பேசி,  நல்ல முடிவு எடுப்போம். எங்களுடைய எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் தொண்டர்களின் விருப்பப்படியும்,  தமிழகத்தினுடைய மக்களின் நலன் கருதி தான் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

Categories

Tech |