மதுரை செல்லூர் பகுதியில் ராஜேஷ் கண்ணன்(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டும் தொழில் செய்துவருகிறார். இந்நிலையில் நேற்று இவர் மதுரை பாத்திமா கல்லூரி பகுதியிலிருந்து தத்தனேரி நோக்கி பயணிகளுடன் ஆட்டோ ஒட்டிக்கொண்டு வந்தார். வைத்தியநாதபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்தது. உடனடியாக பிரேக் அடித்ததால், ஆட்டோ ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ எதிரே வந்த தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
நேர் எதிரில் வந்த கல்லூரி பேருந்து ஓட்டுநர் சாதூரியமாக இடது பக்கம் திரும்பியதால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. இதனையடுத்து ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆட்டோவில் பயணம் செய்த சிந்தாமணி பகுதியை சேர்ந்த புஷ்பா மற்றும் குழந்தைகள் தீபிகா, கவின் மற்றும் சுரேஷ் ஆகியவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக மீட்கப்பட்டு பொதுமக்கள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த பகுதியில் அதிக அளவு நாய் தொல்லை இருப்பதால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நிலவுவதாக மதுரை மாநகராட்சியின் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.