Categories
சினிமா தமிழ் சினிமா

எதுவும் உண்மை இல்லை… ரசிகரின் கேள்விக்கு சமந்தா பதில்… விவாகரத்துக்கு முற்றுப்புள்ளி…!!!

முன்னணி நடிகை சமந்தா முதல் முறையாக விவாகரத்து வதந்தி குறித்து பேசியுள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர்  தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் ஹிட் அடித்து வருகிறது.

இதற்கிடையில் நடிகை சமந்தாவும் அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து செய்கிறார்கள் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதுவரை இது குறித்து எதுவும் பேசாது இருந்து நடிகை சமந்தா முதல் முறையாக இதுபற்றி பேசியுள்ளார்,

அதன் படி சமூக வலைத் தளங்களின் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய அவரிடம் ரசிகர் ஒருவர் விவாகரத்து குறித்து கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த சமந்தா “இதுபோன்ற வதந்திகள் எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை. மேலும் 100 வதந்திகள் இது போல இருக்கிறது. எதுவும் உண்மை அல்ல. எனக்கு ஹைதராபாத் தான் ஒவ்வொன்றையும் வழங்கியது. ஆகையால் நான் இங்கேதான் வசிப்பேன்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |