தோனியின் தவறான முடிவு என நேற்றை போட்டியில் கடைசி ஓவர் ஜடேஜா வீசியது குறித்து ஜமைக்கா நாட்டு ஓட்டப்பந்தய வீரர் யோகன் ப்ளேக் தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த டெல்லி – சென்னை போட்டியில் ஷிகார் தவானின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி தோல்வியை சந்தித்தது. 179 ரன்கள் அடித்தும் கூட டெல்லி அணி 185 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கடைசி ஓவரை தோனி ஜடேஜாவிடம் கொடுத்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
கடைசி 2 ஓவர்களில் 35 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், அலெக்ஸ் கேரி 19ஆவது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் டெல்லி 4 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. அப்போது அனுபவ வீரர் பிராவோ பந்து வீசுவார் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாந்து போனார்கள்.
மாறாக, ஜடேஜாவிடம் பந்தை கொடுத்தார் தோனி. கடைசி ஓவரில் அக்சர் பட்டேல் 3 சிக்ஸ் அடித்தார். அக்சர் பட்டேல் சிக்ஸர்கள் அடிக்க டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.தோனியின் இந்த முடிவு அவரின் ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஜமைக்கா நாட்டு ஓட்டப்பந்தய வீரர் யோகன் ப்ளேக், கடைசி ஓவரில் ஜடேஜாவை பந்து வீச வைத்தது மிகவும் மோசமான முடிவு என விமர்சித்துள்ளார். ட்விட்டர் மூலம் அவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகின்றது.
Poor poor poor poor choice Mahendra Singh Dhoni. You just can't bowl Jadeja to the left hand batsman hmmmm. @IPLselfie @IPL @ChennaiIPL @Dream11 @DJBravo47. pic.twitter.com/QxSWhBXaCD
— Yohan Blake (@YohanBlake) October 17, 2020