Categories
தேசிய செய்திகள்

அப்படிலாம் சொல்லவே இல்லை…! யாரும் நம்பிறாதீங்க… உண்மையை வெளியிட்ட ரயில்வே …!

வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பயணிகள் ரயில் சேவைகள் தொடங்கும் என்ற செய்தி முற்றிலும் போலியானது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அனைத்து பயணிகள் ரயில்களும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று செய்தி வெளியானது. ஆனால் இதனை இந்திய ரயில்வே மறுத்துள்ளது. இதுகுறித்து இந்திய ரயில்வே தெரிவித்ததாவது, வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ரயில்கள் இயக்கப்படும் என்று செய்திகள் பரவி வருகிறது. ஆனால் இது போலியான செய்திகள்.

இந்திய ரயில்வே இது போன்ற அறிக்கைகளை இன்னும் வெளியிடவில்லை. மேலும் அனைத்து ரயில்களும் இயக்குவது குறித்து ரயில்வே அமைச்சகம் தான் முடிவு செய்யும். அதன்பிறகுதான் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடப்படும். எனவே இது போலியான செய்தி. அரசின் உண்மை அறியும் சமூக வலைத்தளமான PIB  ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தி முற்றிலும் போலியானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பயணிகள் ரயில்களும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இது முற்றிலும் போலியான கூற்று. இதுபோன்று இன்னும் எந்த தகவல்களையும் இந்திய ரயில்வே அறிவிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |