அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் மனுவை பற்றி பேசுகிறார்கள் அவர்கள் மனு என்றால் என்ன என்பதை தெளிவாக கூற வேண்டும். மனுவைப் பற்றி அவர்கள் தெளிவாக பேசினால் மக்கள் கல்லைக் கொண்டு அவர்களை அடிப்பார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் மக்கள் மனுவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இப்போது வேதனையில் இருப்பது தமிழக மக்கள் கிடையாது இபிஎஸ் மட்டும்தான். தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தற்போது கடும் நெருக்கடியில் இருக்கிறார். மேலும் தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு தொழில்நுட்ப துறையில் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கூறினார்.