இன்று காலை டெல்லியில் குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவரை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின், இன்று மாலை 4 மணியளவில் பிரதமரை சந்திக்க இருக்கின்றேன். அதற்கு என்ன காரணம் என்று கேட்டீர்கள் என்றால் ? 150 க்கும் மேற்பட்ட நாடுகளை சார்ந்த வீரர்கள் செஸ் வீரர்கள் கலந்து கொண்ட 44வது செஸ் ஒலிம்பிக் போட்டி சென்னையில் நடந்தது. இதனை பிரதமர் தொடங்கி வைக்கணும்னு நாங்க வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, மாண்புமிகு பிரதமர் அவர்கள் நேரடியாக சென்னைக்கு வந்து அதை தொடங்கி வைத்தார்கள்.
அதேபோல அந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் நேரடியான கொடுக்கணும்னு நினைச்ச நேரத்துல, எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தால் நான் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டேன். அதனால் என்னால நேரடியாக தர முடியாத சூழலில் இருந்தாலும், நான் தொலைபேசியில் அந்த செய்தியை சொன்னதுக்கு பிறகு அவரே நேரடியாக வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
போட்டியை தொடங்கி வைத்த அவருக்கு நன்றி சொல்லிட்டு, போனோம்னு இன்னைக்கு நேரடியாக வந்து நன்றி சொல்வதற்காக இன்று மாலை 4 மணிக்கு சந்திக்க இருக்கின்றேன். அதே நேரத்துல நான் முதலமைச்சராக பொறுப்பேற்று இரண்டு, மூன்று முறை டெல்லிக்கு வந்திருந்து பிரதமரை சந்தித்து, தமிழ்நாட்டினுடைய பல்வேறு கோரிக்கைகளை எல்லாம் நான் எடுத்து வைத்திருக்கிறேன் என தெரிவித்தார்.