செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ADMK எம்,.எல்.ஏக்கள் மூன்று பேர் DMK தரப்பில் பேசுகிறார்கள் என்று சொன்னார்கள். மூணு பேர் இல்ல, யாருமே சரி.. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கிளை கழகத்தில் இருக்கும் ஒரு தொண்டன் கூட, திமுகவுடன் எந்த தொடர்பும் வைக்கமாட்டான். அதை ஆணித்தரம் வைத்துக் கொள்ளுங்கள்.
ஆனால் எடப்பாடியார் சொன்னார், 10 பேரு எங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். உடனே என்ன சொல்கிறார் ஆர் எஸ் பாரதி ? அவர் ஆர் எஸ் பாரதி இல்ல, ரீல் சுற்றும் பாரதி. அவரு உடனே நாங்கள் 50 பேர் என்றார். இதெல்லாம் வந்து நீங்களே யோசனை பண்ணிக் கொள்ளுங்கள். ஒரு தொண்டன் கூட சரி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து வேற எந்த கட்சிக்கும் போக மாட்டார்கள்.
அவர் உயிர் இருக்கும் வரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தான் இருப்பான். அதனால் ஸ்டாலின் நினைப்பதெல்லாம் பகல் கனவு, வீம்புக்கு தான் சொல்றாரு ஒழிய, அவர்கள் கட்சியில் இருந்து வேண்டுமானால் வரலாம், ஆனால் எங்கள் கட்சியிலிருந்து போக மாட்டார்கள்.
அதுதான் திமுகவும், ஓபிஎஸ்சும் கைகோர்த்துக் கொண்டார்கள். திமுகவின் B – டீமாக தான் ஓபிஎஸ், திருமதி சசிகலா, தினகரன் செயல்படுகிறார்கள். அதனால் இது உள்ளங்கை நெல்லிக்கனி போல எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் என தெரிவித்தார்.