Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போதிய வருவாய் இல்லை… கிராமப்புறங்களில் இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் பாதியாக குறைப்பு?

போதிய வருவாய் இல்லாததாலும் பயணிகள் இல்லாததாலும் பேருந்துகள் இயக்கம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜூன் 1ம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 50% பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 5,000திற்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் பல்வேறு மாவட்டங்களில் இயக்கப்பட்டு வந்தது.

ஆனால் போதிய அளவுக்கு பேருந்துகளில் பயணிகள் பயணம் மேற்கொள்ளவில்லை. மேலும் கிராமங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் பயணம் மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது, வருவாய் குறைந்துள்ளதே தவிர, கிராமங்களில் அரசு பேருந்துகளின் இயக்கத்தை குறைக்கவில்லை என தகவல் அளித்துள்ளனர்.

இந்த நிலையில், செங்கத்தில் நாள் முழுவதும் ஒரு பேருந்தில் ரூ.160 மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. மேலும் அங்கு மொத்தம் 19 பேருந்துகள் இயக்கப்பட்டதில் முதல் நாள் ரூ.23,000 மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த 19 பேருந்துகளுக்கு டீசல் மட்டும் ரூ.1.07 லட்சத்துக்கு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |