Categories
மாநில செய்திகள்

“விநாயகர் சதுர்த்தி”… கோவில்களில் சிறப்பு பூஜைகள்… பக்தர்களுக்கு அனுமதி இல்லை..!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. 

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடை பெற்று வருகின்றன. அந்த வகையில் திருச்சி உச்சி பிள்ளையார் கோவிலில் வருடம் தோறும் கொண்டாடப்படும் பூஜை போன்று இந்த வருடம் கொண்டாடப்படவில்லை. மேலும் எப்பொழுதும் நடக்கும் பூஜைகள் மட்டுமே நடைபெற்று பக்தர்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. அதேபோல் கோவையில் கொரோனா வைரஸ் உருவத்தை விநாயகர் வதம் செய்வது போல் சிலைகள் தனியார் இடங்களில் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று சிறப்பு பூஜைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அங்கும் பக்தர்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.

இதனை அடுத்து தூத்துக்குடி மாவட்ட பரத விநாயகர் ஆலயத்தின் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்கள் வெளியில் நின்று வழிபட அனுமதிக்கப்பட்டனர். மேலும் புதுவையில் உள்ள பிரசித்திப் பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அங்கு பொது மக்களுக்கு வெப்ப பரிசோதனை மேற்கொண்ட பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இருந்தாலும் அபிஷேகப் பொருட்களான விபூதி, லட்டு போன்றவை மக்களுக்கு வழங்கப்பட வில்லை.

Categories

Tech |