மக்கள் நீதி மய்யம் பழிவாங்கும் அரசு அல்ல வழிகாட்டும் அரசு என்று நடிகர் கமல் பரப்புரையில் பேசியுள்ளார்.
2021 தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “நெசவாளர்களின் வாழ்வாதாரம் சிறக்க தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும், மக்கள் நீதி மையம் தலைமையில் ஆட்சி அமைய எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும் பல புதிய மக்களுக்கு பயன்படும் திட்டங்களுக்கு நாங்கள் சிறு நடை போட்டுக்கொண்டிருக்கும். அதனை வீர நடையாக மாற்ற ஒத்துழைக்க வேண்டும். எங்களுடைய அரசியல் பழி போடும் அரசியல் கிடையாது. மேலும் பழிவாங்கும் அரசியல் கிடையாது, வழிகாட்டும் அரசு. வீழ்த்தும் கருவியாக எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று பரப்புரை நிகழ்த்தியுள்ளார்