Categories
உலக செய்திகள்

பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவரா….? கைது செய்யப்பட்ட குற்றாவாளி…. வெளிவந்துள்ள உண்மைகள்….!!

நார்வே தாக்குதலில் ஈடுபட்டவர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவரா என்பது தொடர்பாக விசராணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நார்வேயின் தலைநகரான ஓஸ்லோவில் இருந்து சுமார் 50 மைல்கள் தொலைவில்  Kongsberg நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் மையத்தில் கடந்த புதன்கிழமை மாலை 6.30 மணி அளவில் அப்பகுதி வழியே சென்ற மர்ம நபர் ஒருவர் வில் அம்பு கொண்டு அங்கிருந்த அனைவரையும் தாக்கியுள்ளார். இதில் 4 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Gallery

அதிலும் அவர்கள் அனைவரும் 50 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று அப்பகுதி போலீஸ் தலைவரான ஓலே பிரெட்ரூப் சவேருட் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துவிட்டதாகவும் அவர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் இல்லை என்றும் தெரிவித்தனர்.

Gallery

ஆனால் இது தொடர்பாக தற்போது முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இந்த தாக்குதலானது ஒரு பயங்கரவாத அமைப்பின் செயல் என்று நார்வேயின் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது. எனினும் இத்தாக்குதலின்ன் முக்கய நோக்கம் என்ன என்பது குறித்து தெளிவான தகவல்கள் தெரியவில்லை.

Gallery

அதிலும் போலீசாரால் கைது செய்யப்பட்ட 37 வயதான ஆண்டர்சன் பிராதன் என்பவர் ஒரு டேனிஷ் குடிமகன் ஆவார். இவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறியுள்ளார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஒருவேளை இவர் ஒரு பயங்கரவாதியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து வருகின்றனர்.

Categories

Tech |