மர்ம நபர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நார்வேயின் தலைநகரான ஓஸ்லோவின் தென்மேற்கில் காங்ஸ்பெர்க் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் மர்ம நபர் ஒருவர் நுழைந்து மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள உள்ள பகுதிகளில் வில் அம்பு கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும் துப்பாக்கிச் சூடும் நிகழ்த்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த தாக்குதல் நடத்திய மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.