Categories
உலக செய்திகள்

போர் எதிரொலி…. ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடை…. நார்வே அறிவிப்பு…!!!

நார்வே அரசு, ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை அறிவித்திருக்கிறது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து கடுமையாயக போர் தொடுத்து வருவதை உலக நாடுகள் எதிர்த்தன. எனினும், ரஷ்யா பின்வாங்கவில்லை. தொடர்ந்து அந்நாட்டின் மீது தீவிரமாக தாக்குதல்கள் மேற்கொண்டு வருகிறது. எனவே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை அறிவித்தன.

மேலும், பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் சேவைகளை ரஷ்யாவில் நிறுத்திக்கொண்டன. இந்நிலையில், நார்வே தங்கள் நாட்டிலிருந்து பொருட்கள், சேவைகள், தொழில்நுட்ப ஏற்றுமதி போன்றவற்றில் ரஷ்யாவிற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |