Categories
உலக செய்திகள்

தென்கொரியா தாக்குதல் மேற்கொண்டால்…. அணு ஆயுதங்களை உபயோகிப்போம்… வடகொரியா எச்சரிக்கை…!!!

தென் கொரியா ராணுவ தாக்குதல் மேற்கொண்டால் நாங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று வட கொரிய அதிபரின் சகோதரி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், கடந்த 2011-ம் வருடத்தில் பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து சக்தி வாய்ந்த ஏவுகணைகளையும் அணு ஆயுதங்களையும் சோதனை செய்து வருகிறார். மேலும் அவர் நடத்தும் ஏவுகணைச் சோதனைகள் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை மீறுவதாக இருக்கிறது.

எனவே, அந்நாட்டின் மீது அமெரிக்கா போன்ற நாடுகள் கடும் பொருளாதார தடைகளை அறிவித்தன. எனினும் அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வடகொரியா ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது. இந்நிலையில், தென்கொரியாவின் ராணுவ மந்திரியான சூ ஊக், தங்கள் நாட்டில் ஏவுகணை செலுத்தக்கூடிய மையத்திற்கு சென்றிருக்கிறார்.

அப்போது, அவர் வடகொரியாவின் ஏவுகணை சோதனையை விமர்சித்தார். தங்கள் நாட்டின் மீது வடகொரியா ஏவுகணை ஏவ திட்டம் தீட்டினால், அந்நாட்டின் மீது பயங்கர தாக்குதல்களை நடத்தக்கூடிய திறன் தங்களிடம் உள்ளது என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யூ ஜாங் தெரிவித்திருப்பதாவது, தென்கொரியா தங்கள் நாட்டின் மீது இராணுவ நடவடிக்கை எடுத்தால் நாங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

Categories

Tech |