Categories
உலக செய்திகள்

இதுக்கு முக்கிய காரணமே அமெரிக்கா தான்…. கடுமையாக சாடும் வடகொரியா…!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க முக்கிய காரணம் அமெரிக்கா தான் என்று வடகொரியா குற்றம்சாட்டியிருக்கிறது.

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க தொடங்கி 4-ஆம் நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது வரை, இதில் குழந்தைகள் மூவர் உட்பட 198 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்நிலையில், வடகொரியா, உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுக்க மிக முக்கிய காரணம் அமெரிக்கா தான் என்று தெரிவித்துள்ளது.

இதுபற்றி வடகொரியாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது, ரஸ்யாவினுடைய நியாயமான கோரிக்கை அமெரிக்காவால் நிராகரிக்கப்பட்டது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுக்க முக்கிய காரணம் அமெரிக்கா தான். உக்ரைன் பிரச்சனையில் அமெரிக்கா இரண்டு விதமான மனப்பான்மையுடன் இருக்கிறது.

அமைதியை நிலைநாட்ட முயல்வதாக தெரிவித்துவிட்டு, பிற நாடுகளின் உள் விவகாரங்களில் அதிகமாக தலையிடுகிறது. உலகை அமெரிக்க ஆண்ட காலம் முடிந்துவிட்டது. மேலும் பிற நாடுகள் தங்கள் நாடுகளின் தற்காப்பு மற்றும் தேசிய பாதுகாப்பிற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அமெரிக்கா எதிர்ப்பது தவறானது. உங்களிடம் வலிமை இல்லை எனில் நீங்கள் தான் கடைசியில் துன்பத்தை அனுபவிக்க நேரிடும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Categories

Tech |