திமுக சார்பில் நடந்த நிகழ்வில் பேசிய திருச்சி சிவா, வடக்கே வாழ்கிறவர்கள், தெற்கே இப்படி ஒரு ஆட்சி நடக்கிறதே என்று வியப்போடு பார்க்கின்ற பெரும் மரியாதைக்குரிய கட்சியாக நம்முடைய கட்சி திகழ்கிறது. இங்கிருந்து வெளிநாடு போகின்ற போது பரவசத்தோடு கோட்டு, சூட்டோடு போக வேண்டும் என்பது இல்லை. இது உங்கள் பாரம்பரிய உடையா ? ஆம் நான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன், அதன் அடையாளம் தான் நான் கட்டி இருக்கிற வேட்டி.
நாங்கள் தமிழ் உணர்வு உள்ளவர்கள், தமிழ் மொழி எங்கள் தாய்மொழி என்ற பெருமிதத்தோடு அவர்களிடம் சொல்லுவோம். நீங்கள் பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்கிறீர்கள் என்றால், இலவச பயணம் அல்ல, உங்களுக்காக உங்கள் அண்ணன் முதலமைச்சரின் அரசாங்கம் போக்குவரத்து துறைக்கு அதை தந்து விடுகிறது. பல பேருக்கு அது புரிவதில்லை,
வேலைக்கு போகிற பெண்களுடைய அவலம், படிக்கிற பிள்ளைகளுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துயரம், அவர்களுக்கு சின்ன சின்ன செலவுகளை நாங்கள் குறைக்கிறோம். எல்லாவற்றிற்கும் மானியம் என்று சொல்லுகிற போது, அரசாங்கம் உங்கள் சுமைகளை ஏற்றுக் கொள்கின்றது என தெரிவித்தார்.