Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை : முதல்வர் ஆலோசனை ….!!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.

வடகிழக்கு பருவமழை கடந்த 17ஆம் தேதி முதல் தொடங்கியதால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த ஒரு சில தினங்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது குறித்தும் , இனி செய்ய வேண்டிய பணிகள் குறித்து  முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகின்றது.

Image result for முதல்வர் ஆலோசனை

தலைமை செயலகத்தில் நடைபெறும்  ஆலோசனை கூட்டத்தில்  துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அமைச்சர் வேலுமணி ஜெயக்குமார் விஜயபாஸ்கர் ஆர் பி உதயகுமார் தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். இதில் வடகிழக்கு  பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாக அடையாளம் காணப்பட்ட தாழ்வான பகுதிகள் , மீட்புப்பணி குறித்த விவரம் , வெள்ளம் குறித்த கண்காணிப்பு என பல்வேறு விஷயங்கள் விரிவாக பேசப்படுகின்றது.

Categories

Tech |