வடகொரியா மற்றும் ரஷ்யா நாட்டு தலைவர்கள் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது வெற்றிப் பெற்றுள்ளது என இருநாட்டு அதிபர்களும் அறிவித்துள்ளனர்.
கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வட கொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளால் தொடந்து அச்சுறுத்தி வந்த நிலையில், இந்த நடவடிக்கைக்கு குறித்து அமெரிக்க உள்ளிட்ட பல உலக நாடுகள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தது. சோவியத் ஒன்றியம் சிதைவிற்கு பிறகு ரஷ்யாவிற்கும், வடகொரியாவிற்கும் இடையே உள்ள உறவில் சற்று தொய்வு ஏற்பட்டது.
தற்போது ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வடகொரியா முன்வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன்னும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த பேச்சு வார்த்தை பெரிதளவு வெற்றிப் பெறவில்லை.
இந்நிலையில் தன்னுடன் வலிமையான நாடுகள் நட்பாக உள்ளது என்பதை காட்டும் வகையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபர் விளாடிமர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை பெரிதளவில் வெற்றிப் பெற்றதோடு, இதில் கிம் ஜாங் உன் பாதுகாப்பு உத்தரவாதங்களை அளித்ததோடு, ரஷ்யாவுக்கு அணு ஆயுதங்கள் வழங்க தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புதினுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார்.