Categories
உலக செய்திகள்

எத்தனை தடவ தா பண்ணுவீங்க…. உலக நாடுகளை டென்ஷன் ஆக்கும் வடகொரியா…. அமெரிக்கா கண்டனம்…!!!

வடகொரிய நாடு ஏவுகணை பரிசோதனை நடத்தியதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருக்கிறது.

வடகொரிய அரசு ஏவுகணை பரிசோதனை நடத்தி அவ்வபோது அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்நிலையில் வடகொரியா மீண்டும் இரண்டு ஏவுகணைகளைப் பரிசோதனை செய்திருப்பதாக தென்கொரிய அரசு  தெரிவித்திருக்கிறது.

இதனைத்தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத்துறை, வடகொரிய நாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஐ.நா பாதுகாப்பு சபைக்குரிய தீர்மானங்களை மீறக்கூடிய செயல்பாடுகளில், வடகொரியா ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியிருக்கிறார். மேலும், வடகொரிய அரசு, இதற்காக சரியான விளக்கம் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

Categories

Tech |