Categories
உலக செய்திகள்

“அதிகாலையில் ஏவுகணை சோதனை!”.. அண்டை நாடுகளை அச்சுறுத்தி வரும் வடகொரியா..!!

தென் கொரிய இராணுவமானது, வட கொரியா இன்று அதிகாலையில், அதன் கிழக்கு கடலில்  ஏவுகணை ஏவியதாக தெரிவித்திருக்கிறது.

இந்த ஏவுகணை சோதனையை அடுத்து, வட கொரிய தூதர் ஐ.நா.வில், தற்காப்பையும், ஆயுதங்களையும் சோதிக்கக்கூடிய தங்களது உரிமையை யாரும் மறுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கொரியாவின் குறுகிய தூரத்திலான ஏவுகணை சோதனை தொடர்பில் கவனமுடன் இருக்கிறோம்.

எனவே,  அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு இதனால் எந்தவித அச்சமும் கிடையாது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், வட கொரியா சமீப நாட்களில் ஏவிய ஏவுகணைகள் மற்றும் அதிபர் கிம் ஜாங்-உன்னின் சகோதரியான கிம் யோ-ஜாங் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கைகள் போன்றவற்றில் இருக்கும் நோக்கங்களை ஆராந்து கூற, சியோலின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு தென் கொரியாவின் அதிபரான, மூன் ஜே-இன் உத்தரவிட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

 

Categories

Tech |