வடகொரியா இந்த வருடத்தில் எட்டாம் முறையாக ஏவுகணை சோதனை நடத்தியிருப்பதாக தென்கொரியா தகவல் வெளியிட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்த, பதற்றத்தில் அமெரிக்கா திசை திரும்பிய நிலையில், வடகொரியா ஏவுகணை பரிசோதனை மேற்கொள்வது போன்ற ஆத்திரமடைய செய்யும் செயல்களை மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக கடந்த வாரத்தில் தென்கொரிய அதிபர் எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், வடகொரியா இந்த வருடத்தில் எட்டாம் முறையாக ஏவுகணை பரிசோதனை நடத்தியிருக்கிறது என்று தென் கொரியாவின் ராணுவம் கூறியுள்ளது. வடகொரியா, கிழக்கு கடற்கரையில் இருக்கும் கடலில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது.