தென்கொரிய நாட்டின் எல்லைப் பகுதிக்கு அருகில் பீரங்கி குண்டுகளை எறிந்து வடகொரியா சோதனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியா மேற்கொள்ளும் ராணுவ பயிற்சியும் ஏவுகணை சோதனையும் சமீப நாட்களாக அதிகரித்திருக்கிறது. அதன்படி, சமீப காலங்களில் ஐக்கிய நாடுகள் சபை தடை செய்திருந்த கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணை உட்பட பல ஏவுகணைகளை சோதனை செய்திருக்கிறது.
இதன் காரணமாக, கொரியா தீபகற்பம் பதற்ற நிலையில் இருக்கிறது. இந்நிலையில் நேற்று தென்கொரியாவின் எல்லைப் பகுதிக்கு அருகில் வடகொரியா பீரங்கிகளை எறிந்து சோதித்திருக்கிறது. கடந்த 2018 ஆம் வருடத்தில் கட்டப்பட்ட தடுப்பு மண்டலத்தை குறிவைத்து வடகொரியா நூற்றுக்கும் அதிகமான பீரங்கி குண்டுகளை எறிந்ததாக கூறப்பட்டிருக்கிறது.
இது பற்றி தென்கொரியாவின் கூட்டு பணிகளுக்கான தலைவர் கூறுகையில், தொடர்ந்து ஆத்திரமூட்டும் விதத்தில் செயல்படும் வடகொரியாவின் நடவடிக்கைகளால் கொரிய தீபகற்பம் மட்டுமல்லாமல் சர்வதேச சமூகத்திலும் அமைதியும் பாதுகாப்பும் குறையும். இந்த நடவடிக்கையை வடகொரியா உடனே நிறுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.