Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

ஒரே இடத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்…. போலீசார் தடியடி : கோவையில் பரபரப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை கன்னியாகுமரியில் ஒரு முதியவர் உயிரிழந்த நிலையில், அதனை தொடர்ந்து 2 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு ஏப்., 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பணிகளை தவிர்த்து மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோவையில் ஒரே இடத்தில் குவிந்த 100க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்த முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட மாநிலங்களிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு வந்துள்ள மக்கள் தற்போது ஊரடங்கு உத்தரவால் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாத நிலை உள்ளது. தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் உணவு, தங்குமிடம் உள்ளிட்டவற்றிற்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறி அவர்கள் கோவை சுந்தராபுரம் பகுதி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்தி உணவு, தங்கும் இடம், மருத்துவ வசதி கோரி கோவையில் ஓரே இடத்தில் குவிந்த 100க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலையுமாறு கூறினர். ஆனால் அவர்கள் கலைய மறுத்ததால் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இந்த சம்பவம் கோவை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |