சுவீடன் நாட்டின் கடலோர காவல் படையினர், நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாயில் நான்காவதாக ஒரு கசிவு பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.
ரஷ்ய நாட்டிலிருந்து ஜெர்மன் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்படும் நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் கடந்த திங்கட்கிழமை அன்று டென்மார்க்கிற்கு அருகே இருக்கும் கடலில் கசிந்தது. அதன் பிறகு, மிகப்பெரிய அளவில் வெடிப்பும் ஏற்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்றும் சுவீடன் நாட்டின் கடலோர காவல் படையினர் அந்த எரிவாயு குழாயிலிருந்து மேலும் இரண்டு கசிவு பகுதிகளை கண்டறிந்தார்கள்.
பிரிட்டன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகமானது இந்த கசிவு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்று தெரிவித்தது. இதேபோன்று ஐரோப்பிய யூனியனும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாக இந்த கசிவை அறிவித்திருக்கிறது. இதனையடுத்து ரஷ்யா, இந்த எரிவாயு கசிவு குறித்து எங்களை குற்றம் சாட்டுவது முட்டாள் தனம் என்று கூறியிருக்கிறது. இந்நிலையில், சுவீடன் நாட்டின் கடலோர காவல் படையினர் எரிவாயு குழாய்களில் நான்காவதாக கசிவு பகுதியை கண்டுபிடித்ததாக கூறியிருக்கிறார்கள்.