பாகிஸ்தானின் முன்னாள் தூதர் சவுகத் அலி முகதாமின் மகள் நூர் முகாதம் இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து மர்ம நபர்கள் சிலரால் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரவு பாகிஸ்தானின் முன்னாள் தூதர் சவுகத் அலி முகதாமின் மகள் நூர் முகாதம் மர்ம நபர்கள் சிலரால் இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். தென்கொரியாவில் பாகிஸ்தானின் தூதராக இருந்த சவுகத் அலி முகதாம் கஜகஸ்தானுக்கான பாகிஸ்தான் தூதராகவும் பணிபுரிந்துள்ளார். மேலும் அவருடைய மகளின் கொலைத் தொடர்பாக நூரின் நண்பர் ஒருவரும், ஜாகீர் ஜாபர் என்ற நபரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு பெரிய கட்டுமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் மகன் தான் ஜாபர் என்பது காவல்துறையினர் வெளியிட்ட முக்கிய தகவல் ஆகும். அதோடு மட்டுமில்லாமல் நூர் ஜாபருடனான உறவை முடித்துக் கொண்டதால் நூரை ஜாபர் கொடூரமாக கொலை செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் ஜாபருக்கு உளவியல் பிரச்சினை இருப்பதாகவும், அவர் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் காவல்துறையினர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.