செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், ஆன்லைன் ரம்மி மட்டும் இல்லைங்க. ஆன்லைனில் நிறையா இருக்கு. சரத்குமார் வந்து ஆன்லைன்ல நடிச்ச ஒரே காரணத்துக்காக இந்த கேள்வியை கேக்குறீங்க. எனக்கு அதை பத்தி கவலை கிடையாது. இது பெரிய விஷயம். உலகமே ஆன்லைனில் இருக்கு. மோனோகிராஃப் பத்தி நானே கூட அன்னைக்கே சொன்னேன். மோனோகிராஃப் தடை செய்றோம்மா இந்தியாவில்….
துபாய்ல போய் மூணு தடவை போனீங்கன்னா ஐபி அட்ரஸ் கண்டுபிடிச்சு துபாய் ஹோட்டல் ரூமுக்கு வந்துருவான். இங்க பண்ண முடியுதா ? மோனோகிராஃப் சைட்டை ப்ளாக் பண்றமா ஏன் ? ஏர்டெல் மாதிரி நிறைய வந்திருச்சு. ஆன்லைனில் ரம்மி நான் இல்லைங்க… கிரிக்கெட் என்ன பண்றாங்க ? தோனி வராரு, என்ன பண்றாரு ? ஷாருக்கான் வாராரு என்ன பண்றாங்க ? அது சூதாட்டம் இல்லையா ? அங்க தான் போடுறாங்களே…
குடிப்பழக்கம் குடியை கெடுக்கும். புகைபிடிப்பது உடல்நலத்திற்கு கேடு தரும்… ரம்மியை இனிமையாவது பார்த்து விளையாடுங்கள் அதை தடுக்க அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவங்க முடிவு எடுக்கணும்.தனி நபரான சரத்குமாரை அங்கே நடிக்காத இங்கே நடிக்காத என சொல்லுறத்துக்கு இல்லை. நானா கெடுக்கின்றேன். என்னுடைய கிரெடிட் கார்டுல எனக்கு லிமிட் 10 லட்சம். எதோ சம்பாதிச்சு வந்ததால் அவ்வளவு கொடுக்கின்றான். நான் ஆன்லைனில் போய் விளையாடினாள் 10 லட்சத்துக்கு மேல என்னால விளையாட முடியுமா ? எனக்கு தெரில என தெரிவித்தார்.