உலக நாடுகள் ஊரடங்கை தளர்த்தக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகையே அலற விட்டுக்கொண்டு இருக்கும் கொரோனாவுக்கு 45 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 87 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரசை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் பலவும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தி உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதும் முடங்கி, பொருளாதார நடவடிக்கை சீர்குலைந்துள்ளது. பொருளாதாரத்தில் இருந்து மீண்டு வருவதற்கு உலக நாடுகளுக்கு பல வருடங்கள் ஆகலாம் என்று பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில்தான் இந்தியா, ஜெர்மனி, சீனா உள்ளிட்ட பல நாடுகள் ஊரடங்கு உத்தரவில் தளர்வு செய்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை பிரிவுத் தலைவர் மைக் ரியான் கூறுகையில், கண்களை மூடிக்கொண்டு கார் ஓட்டுவது தான் நான் பார்த்த வேடிக்கையான சம்பவம். உலக நாடுகளில் தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது அதைத்தான் காட்டுகிறது. இது வைரஸ் பரவலை மேலும் அதிகமாகும், இதனால் ஏராளமானோர் பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.