நம்முடைய எல்லைகள் காக்கப்படும் என்று பிரதமர் மோடி மங்கிபாத் நிகழ்ச்சி மூலம் தெரிவித்திருக்கிறார்.
மனதின் குரல் என்ற வாராந்திர நிகழ்ச்சி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். குறிப்பாக சீனா – இந்தியா மோதல் குறித்த முக்கியமான விவகாரம் சம்பந்தமாக பேசினார். இந்தியா சீனா எல்லை விவகாரம் பற்றி அவர் தன்னுடைய பேச்சின் மூலமாக மக்களுக்கு எடுத்துக் கூறி வருகிறார். தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி உள்ளிட்டோர் எல்லை பிரச்சனை சம்மந்தமாக பிரதமர் நரேந்திர மோடி தொடர்ச்சியாக மௌனம் காத்து வருவதாகவும், எப்போது பிரதமர் நரேந்திர மோடி எல்லை பிரச்சனை, ராணுவ வீரர்களின் பாதுகாப்பு சம்மந்தமாக பேசுவார் என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
இன்றைய தினம் கூட தனது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தி இருந்தார். இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய உரையில், இந்திய சீன எல்லைப் பிரச்சனை குறித்து விளக்கம் அளித்துள்ளார். சீனாவுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி முழுமையாக கொடுக்கப்பட்டது.
இந்திய எல்லைகள் முழுமையாக பாதுகாப்பில் உள்ளது. இந்திய எல்லைகள் நம்முடைய கட்டுக்குள் இருப்பதாகவும், வெளிநாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களும், வெளிநாட்டை சேர்ந்தவர்களும் நம்முடைய எல்லையை ஒரு அங்குலம் கூட எடுக்கவில்லை என்றும் தன்னுடைய உரையின் வாயிலாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாடு தற்போது இந்தியா பல்வேறு முன்னேற்றங்களை கண்டுள்ளது என்றும், குறிப்பாக கொரோனா இருக்கக்கூடிய இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அரசு தனக்கானதாக மாற்றி இருக்கிறது என்றும் பிரதமர் மோடி தன்னுடைய பேச்சின் வாயிலாக தெரிவித்துள்ளார்.