பிரான்ஸ் நாட்டின் பெண் எழுத்தாளர் ஒருவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு, இலக்கியம், இயற்பியல், வேதியியல், அமைதி, பொருளாதாரம் மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் உலக அளவில் சாதனை புரிந்த நபர்களுக்கு ஒவ்வொரு வருடமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த வருடத்தில் இயற்பியல், மருத்துவம் மற்றும் வேதியியல் போன்ற துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் அனி எர்னாக்ஸ் என்ற பெண் எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர் எழுதிய எல் அகுபேஷன் என்ற புத்தகத்திற்காக இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.