இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பத்திரிகையாளர்கள் இருவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
பொருளாதாரம், வேதியியல், மருத்துவம், இலக்கியம், இயற்பியல் மற்றும் அமைதி போன்ற துறையில் உலக அளவில் பங்காற்றும் சாதனையாளர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படும். அந்த வகையில் மருத்துவம் மற்றும் இயற்பியல் போன்ற துறைகளுக்கான நோபல் பரிசு முன்னரே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசை இன்று அறிவித்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மரியா ரெசா மற்றும் ரஷ்ய நாட்டை சேர்ந்த டிமிட்ரி முராட்டா ஆகிய இரு பத்திரிகையாளர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அமைதி மற்றும் ஜனநாயக அடிப்படையில் கருத்து சுதந்திரம் உள்ளதை வலியுறுத்தியதற்காக இந்த இரு பத்திரிகையாளர்களுக்கும் நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது.